விகுதிகளையும் அதன் தன்மை மற்றும் வகைகளையும் அறிந்து கொள்ளல்-01

வினாவுக்கான விடையைத் தெளிவாகத் தருதல்.

1. விகுதி என்றால் என்ன?

பகுபதத்தின் இறுதியில் நிற்கும் கூறாகிய இடைப்பகாப்பதமே விகுதி எனப்படும். 

உ+ம்:-  படித்தான் ……………. படி + த் + த் + ஆன் 

             பகுதி                                                   விகுதி   

 

2. விகுதியொன்று எவற்றை வெளிப்படையாகக் காட்டும்?

திணை, பால், எண், இடம், காலம் என்பவற்றை வெளிப்படையாகக் காட்டும்.

 

3. விகுதி எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:

1) பெயர்ச்சொல் விகுதிகள்

2) வினைச்சொல் விகுதிகள் 

 

4. பெயர்ச்சொல் விகுதிகளை எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை? 

நான்கு வகைப்படுத்தலாம். அவையாவன:

1) பால் காட்டும் விகுதிகள் 

2) பண்புப் பெயர் விகுதிகள்

3) தொழிற் பெயர் விகுதிகள் 

4) காலம் காட்டும் தொழிற்பெயர் விகுதிகள்

 

5. பால் காட்டும் விகுதிகள் எவை? 

1)ஆண்பால் விகுதிகள் - அன், ஆன் 

2)பெண்பால் விகுதிகள் அள், ஆள் 

3)பலர்பால் விகுதிகள் அர், ஆர் 

4)ஒன்றன்பால் விகுதிகள் து, டு 

5) பலவின்பால் விகுதிகள் - அ, ஆ

 

6 பண்புப் பெயர் விகுதிகள் எவை? 

பண்பைக் குறிப்பவையான மை, சி, பு, உ, கு, நி, று, போன்றவையாகும். 

உ+ம்  

மை – கருமை 

ஐ – வெள்ளை

சி – மாட்சி 

பு – மாண்பு 

உ – செலவு 

கு - நன்கு 

 

7. தொழிற் பெயர் விகுதிகள் எவை?

தொழிலைக் குறிப்பவையான தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு போன்றவையாகும். 

உ+ம்: 

தல் - நடத்தல் 

ஐ - கொலை 

அல் - ஆடல்

கை - நடக்கை 

அம் - வாட்டம் 

வை - பார்வை 

 

8. காலங்காட்டும் தொழிற் பெயர் விகுதிகள் எவை?

து, மை என்பனவாகும். இவற்றில் து எனும் விகுதியானது முக்காலத்திலேயும் வரும். மை எனும் விகுதி எதிர்காலந் தவிர்ந்த ஏனைய இரு காலங்களிலும் வரும். 

உ+ம்:

விகுதி       இறந்தகாலம்      நிகழ்காலம்            எதிர்காலம்

  து              வந்தது                  வருகின்றது              வருவது       

  மை           வந்தமை              வருகின்றமை             -

 

9.வினைச் சொல் விகுதிகள் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

ஏழு வகைப்படும். அவையாவன:

1 .தன்மை வினை முற்று விகுதிகள் 

2. முன்னிலை வினை முற்று விகுதிகள் 

3. படர்க்கை பால் காட்டும் வினை முற்று விகுதிகள் 

4. வியங்கோள் வினை விகுதிகள் 

5. பெயரெச்ச விகுதிகள் 

6. வினையெச்ச விகுதிகள் 

7. பிறவினை விகுதிகள்

 

10.தன்மை வினை முற்று விகுதிகள் எவை?

இவை ஒருமை, பன்மை இரண்டிலும் வரும். 

ஒருமை -     அன்  உ+ம்:  நடந்தனன்

                      என்  உ +ம்: நடந்தனென் 

                      ஏன்  உ +ம்: நடந்தேன்

                       டு    உ +ம்: உண்டு 

                       து    உ+ம்: வந்து

                       று    உ+ம்: சென்று 

 

பன்மை -   அம்  உ+ம்:   வந்தனம்

                    ஆம்   உ +ம்:  உண்டாம்  

                    ஓம்   உ +ம்:  சென்றோம் 

                    ஏம்   உ +ம்:  வந்தேம்

 

மேலும் பாடங்கள்