இடைநிலை மற்றும் சாரியைகளை அறிந்து கொள்ளல்.

வினாவுக்கான விடையை சுருக்கமாக அணுகுதல்.

1. இடைநிலை என்றால் என்ன?

பகுபதத்தின் பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.

ஓதுவான்

ஓது      +           வ்       +          ஆன்

பகுதி       இடைநிலை    விகுதி

 

2.இடைநிலை எத்தனை வகைப்படும்? அவை எவை? 

மூன்று வகைப்படும். 

அவையாவன: 

பெயர் இடைநிலைகள் 

வினை இடைநிலைகள் அல்லது காலங்காட்டும் இடைநிலைகள்  

எதிர்மறை இடைநிலைகள்

 

3.பெயரிடைநிலைகள் எவை? 

இச், ச், த், வ், ஞ் என்பனவாகும். 

உ+ம்:-  

இச் - தச்சிச்சி (தச்சு + இச் + இ)

ச்  - வலைச்சி (வலை + ச் + ச் + இ) 

த் - ஒருத்தன் (ஒரு + த் + த் + அன்) 

வ் - ஓதுவான் (ஓது + வ் + ஆன்) 

ஞ் - அறிஞன் (அறி + ஞ் + அன்)

 

4.வினை இடைநிலைகள் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

மூன்று வகைப்படும். 

அவையாவன:

இறந்தகால வினை இடைநிலைகள்  

நிகழ்கால வினை இடைநிலைகள்

எதிர்கால வினை இடைநிலைகள்

 

5.இறந்தகால வினை இடைநிலைகள் எவை? 

த், ட், ற், இன், ன் என்பனவாகும். 

உ+ம்:

த் - செய்தான் (செய் + த் + ஆன்) 

ட் - உண்டான் (உண் + ட் + ஆன்) 

ற் - தின்றான் (தின் + ற் + ஆன்) 

இன் - ஓடினான் (ஓடு + இன்+ ஆன்) 

ன் - போனான் (போ + ன் + ஆன்)

 

6.நிகழ்கால வினை இடைநிலைகள் எவை? 

ஆநின்று, கின்று, கிறு என்பனவாகும். 

உ+ம்: 

ஆநின்று - செய்யாநின்றான் (செய் + ஆநின்று+ ஆன்) 

கின்று - செய்கின்றான் (செய் + கின்று + ஆன்) 

கிறு - செய்கிறான் (செய் + கிறு + ஆன்)

 

7.எதிர்கால வினை இடைநிலைகள் எவை? 

ப், வ், என்பனவாகும். 

உ+ம்:- 

நடப்பான் (நட+ ப் + ஆன்) 

செய்வான் (செய் + வ் + ஆன்

 

8.எதிர்மறை இடைநிலைகள் எவை? 

இல், அல், ஆ என்பனவாகும். 

உ+ம்:   இல் - நடந்திலன் (நட + ந் + த் + இல் + அன்) 

             அல் - உண்ணலன் (உண் + ண் + அல் + அன்) 

 

9.சாரியை என்றால் என்ன?  

பகுபதமொன்றில் விகுதிக்கு முன்னால் சார்ந்து வரும் இடைச்சொல் சாரியை எனப்படும்.

 உ+ம்: படித்தனன் - (படி   +     த்     +          த்        +           அன்     +   அன் )

                                       பகுதி   சந்தி    இடைநிலை    சாரியை     விகுதி 

 

10.சாரியைகளாகக் கொள்ளப்படுபவை எவை? 

அன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், ஆம், அ, ஆ, உ, ஏ, ஐ. கு, து, ன் போன்றனவாகும்.

 

மேலும் பாடங்கள்