யாழம்மா எங்கள் தமிழுக்கு வேர்.

யாழம்மா இணையத்தளம் நடாத்தும்

மாபெரும்  இலக்கியப் போட்டி

*****************************************************************

எமது யாழம்மா இணையத்தளமானது

இன்றைய தமிழ்ச் சூழலில்  தமிழ் மொழிக் கல்விசார் சேவையினை

வலைத்தளம் ஊடாக உலகமெங்கும் மிகத்தரமாக

மேற்கொண்டு வருகின்றது.

அவ்வகையில் எமது இணையத்தளத்தின் புதிய விரிவாக்கத்தின்  வெளியீட்டினையொட்டி மாபெரும் இலக்கியப் போட்டி நிகழ்வுகளினை

ஏற்பாடு செய்துள்ளோம்.

வயது எல்லை: 20 வயதுக்கு மேற்பட்டோர்.

கவிதைப் போட்டி  

- இயற்கைச் சூழல்

- உயிர்கொல்லி

- தமிழர் பண்பாடு

- அறிவியல் வளர்ச்சி

- மனித விடுதலை

- எங்கள்  பெரியார்கள்

 

ஆகிய கருப்பொருள்களின் கீழ் பொருத்தமான தலைப்புக்களையிட்டு

20 வரிகளுக்கு மேல் ஆக்கங்கள் அமைதல் வேண்டும்.
 

பரிசு விபரம்

1ம் இடம் - 30000.00 ரூபாய் பெறுமதியான பணப்பரிசில்.

2ம் இடம் - 20000.00 ரூபாய் பெறுமதியான பணப்பரிசில்.

3ம் இடம் - 15000.00 ரூபாய் பெறுமதியான பணப்பரிசில்.

 

முதல் 10 வெற்றியாளர்களிற்கு ஆறுதல் பரிசாக

தலா 5000.00 ரூபாய் வழங்கப்படும்.


சிறுகதைப் போட்டி

- மனித நுண்ணுணர்வுகள்

- புலம்பெயர் வாழ்வு

- அகதி வாழ்க்கை

- போரும் தமிழரும்

- சாதியக்கொடுமை 

- தமிழரும் உலகமும்

- பெண்ணியம் 

ஆகிய கருப்பொருள்களின் கீழ் பொருத்தமான தலைப்புக்களையிட்டு

2000 சொற்களுக்கு மேல்  சிறுகதை அமைய வேண்டும்.

 

பரிசு விபரம்

1ம் இடம் - 50000.00 ரூபாய் பெறுமதியான பணப்பரிசில்.

2ம் இடம் - 40000.00 ரூபாய் பெறுமதியான பணப்பரிசில்.

3ம் இடம் - 30000.00 ரூபாய் பெறுமதியான பணப்பரிசில்.

 

முதல் 10 வெற்றியாளர்களிற்கு ஆறுதல் பரிசாக

தலா 5000.00 ரூபாய் வழங்கப்படும்.

 

பொதுவான போட்டிசார் விடயங்கள்

*****************************************************

அனைத்து ஆக்கங்களும் போட்டியாளரின் சுயமான

படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.

போட்டிக்கான ஆக்கங்கள் அனைத்தும் தட்டச்சு செய்து

மின்னஞ்சல் (mail) அல்லது புலனம் (what's up) மூலம்  PDF வடிவில் அனுப்ப வேண்டும்.

 

ஆக்கங்களை அனுப்பும் போது 

தலைப்பு, பெயர், முகவரி, வயது, தொலைபேசி இலக்கம் 

என்பவை  தெளிவாகத் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 

ஆக்கங்கள் அனுப்பும் இறுதி நாள் - 15.11.2023 

முடிவுகள் அறிவிக்கப்படல் - 31.12.2023 

 

அனைத்துப் போட்டி விதிகளும் எதுவித சமரசமும் இல்லாமல் கண்காணிக்கப்படும்.

 

குறிப்பிட்ட முடிவுத்திகதிக்குப் பின் கிடைக்கும், தெளிவற்ற ஆக்கங்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய ஆக்கங்கள்  என்பன கவனத்திற் கொள்ளப்படமாட்டாது.

நடுவர் குழாமின் முடிவே அறுதியும் இறுதியுமானது.

அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பங்குபற்றல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 

முக்கிய குறிப்பு :- போட்டிக்காக ஆக்கங்கள் எழுதும் அனைத்து பயனாளர்களுக்கும்

யாழம்மா இணையத்தளத்தினை ஒரு மாதத்திற்கு  இலவசமாகப் பார்வையிடும்

பொன்னான வாய்ப்பும் வழங்கப்படும்.

 

போட்டிகளில் வெற்றி பெறும் முதல் இருபது போட்டியாளர்களுக்கு

யாழம்மா இணையத்தளத்தினை மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பார்வையிடும்

மிக மிக அரிதான வாய்ப்பு வழங்கப்படும்.

 

ஆக்கங்களை அனுப்புதற்கான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்:

மின்னஞ்சல்:  info@yazhamma.com 

மின்னஞ்சல் (mail) அல்லது புலனம் (what's up) மூலம்  PDF வடிவில் அனுப்ப வேண்டும்.

தொடர்புக்கு: + 94 76 411 46 15

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

www.yazhamma.com