ஆட்டின் சாமர்த்தியம்

தரம் 2 பாடம் 17.1

 

ஆட்டின் சாமர்த்தியம்

ஆடு ஒன்று வழி தவறி தனிமையில் காட்டிற்குள் நடந்து சென்றது. அது காட்டினை கண்டு வியந்து  “ஆகா! இந்த காடு இவ்வளவு அழகாக உள்ளதே.” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வந்தது. அது வரும் வழியில் தவறுதலாகப் புதருக்குள் விழுந்து விட்டது. அதன் கொம்பில்  இலை, குழைகள் சிக்கிக் கொண்டன. அது தெரியாமல் நடந்து சென்றால் போல் அந்த ஆடு ஒரு சிங்கத்தின் குகைக்குள் நுளைந்து விட்டது. நிழலில் அந்தக் கொம்பிலுள்ள இலை, குழைகள் சிங்கத்தின் முகம் போன்று காட்சியளித்தது. வேட்டையை முடித்து விட்டு தனது குகைக்கு வந்த சிங்கம் அந்த உருவத்தைக் கண்டதும் யார் நீ ? என்று கேட்டது.

ஆடு உடனே யோசித்தது. தனது சாமர்த்தியத்தால் நீ யார்? எனக் கேட்டது. அதற்குச் சிங்கம் நான் இந்தக் காட்டுக்கு ராஜா என்றது. உடனே அந்த ஆடு நான் இந்த காட்டிற்குச் சக்கரவர்த்தியடா என்றது. சிங்கம் நிழலில் அதன் உருவத்தைக் கண்டு பயந்து ஓடிச் சென்றது. ஆடோ ஆனந்தமடைந்தது. சிங்கம் ஓடிச் செல்லும் வழியில் நரியைக் கண்டது. ஏன் சிங்கராஜாவே ஓடி வருகின்றீர்கள் என கேட்டது. அதற்கு சிங்கம், எனது குகைக்குள் வினோதமான மிருகம் ஒன்று உள்ளது. அது இந்தக் காட்டிற்குச் சக்கரவர்த்தி என்று கூறியது. என நரியிடம் பதிலளித்தது. சரி வாருங்கள் பார்ப்போம் என சிங்கத்தை நரி குகைக்குக் கூட்டிச் சென்றது. சென்றதும் ஆடு நரியைக் கண்டது.

ஓ! நரியாரே நமது திட்டப்படி சிங்கத்தைக் கூட்டி வந்து விட்டீர்களா? சரி இருவரும் சேர்ந்து சிங்கத்தைக் கொன்று உண்போம் என ஆடு கூறியது. நரியைப் பார்த்த சிங்கம் அதைத் துரத்திச் சென்றது. ஆடு தனது சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்துக் கொண்டது.

இவ்வாறுதான் பிள்ளைகளே நீங்களும் ஆபத்து வரும் வேளையில் பயம் கொள்ளாமல் சாமர்த்தியமாகச் செயற்பட வேண்டும்.