தாவித்திரியும் அணிலைப்பார்
தரம் 2 பாடம் 18.1
தாவித்திரியும் அணிலைப்பார்
தாவித்திரியும் அணிலைப்பார் - அது
தானியம் பொறுக்கும் அழகைப்பார்
காவிக்கொண்டு வாயினிலே - அங்கே
காணாமல் போகுது அதனைப்பார்.
குடு குடு என்று ஓடுது கூட்டை நோக்கி ஓடுது
தேடித் தேடி ஓடுது தென்னை மரத்தின் உச்சியிலே
நாடி நாடி நானும் சென்றேன்
நடந்ததற்கு முடிவு கிடைத்ததங்கே.
சின்னச் செடியில் குச்சி முறித்து
சின்னஞ் சிறிய கூடு அமைத்து
நான்கு சிறிய குஞ்சுகளை
நன்றாய் வளர்த்து வந்தது.
விளையாட சென்ற நான்
வேடிக்கையாய் இதைப்பார்த்தேன்
வீடு செல்ல மனமின்றி
வியந்து நிற்கின்றேன்..
-சி.பிரதாப்-