கூடி உண்போம்

தரம் 2 பாடம் 19.1

 

கூடி உண்போம்

ஒரு காட்டில் பல பறவைகள் ஒன்றாக வாழ்ந்து வந்தன.  அவை ஒற்றுமையாகவும்  சந்தோசமாகவும் தங்கள் வாழ்வை காட்டில் கழித்து வந்தன. ஒரு நாள் எல்லாப் பறவைகளும் இரை தேடி அங்கும் இங்கும் அலைந்தன. பின்பு எல்லாப் பறவைகளும் தங்களது இரையைக் கொண்டு வந்தன.

அதில் ஒரு குருவிக்கு மட்டும் எங்கு தேடியும் இரை கிடைக்கவில்லை. அது பசியால் வாடியது. அதைப் பார்த்த மற்றைய பறவைகள் தாங்கள் கொண்டு வந்த இரையைக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குருவிக்குக் கொடுத்தன. தாய்க்குருவி மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதைத் தானும் உண்டு தனது குஞ்சுகளுக்கும் கொடுத்துப் பசியாறியது.

மாணவர்களே இவ்வாறு தான் நீங்களும் ஒருவருக்கு உணவில்லை என்றால் உங்களிடம், உள்ளதில் சிலவற்றைக் கொடுத்து மற்றவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து உண்ண வேண்டும். இந்த நற்பழக்கத்தை நீங்கள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும்.