நான் சென்ற சுற்றுலா
தரம் 2 பாடம் 20.1
நான் சென்ற சுற்றுலா
நான் வசிக்கும் நாடாகிய இலங்கை ஒரு சுற்றுலா நாடாகும். எமது நாடு மிகவும் அழகான இயற்கை எழில் கொஞ்சும் நாடாகும்.
நான் எனது குடும்பத்துடன் பேராதனைப் பூங்காவிற்குச் சுற்றுலா சென்றிருந்தேன். அங்கு நான் மிகவும் அழகான பூந்தோட்டங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.
அங்கு பல வர்ணங்களில் பல விதமான பூக்கள் காணப்பட்டன. அது மட்டுமல்லாமல் வித்தியாசமான மரங்களும் காணப்பட்டன.
நாங்கள் தொங்கு பாலத்திலும் ஏறிப்பார்த்து மகிழ்ந்தோம். இந்தச் சுற்றுலாவை நான் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
பிள்ளைகளே! இந்தப் பாடம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன், இது சுவாரஸ்யமான பாடமாகும், சரி பிள்ளைகளே நீங்கள் சென்ற சுற்றுலா குறித்தும் இவ்வாறு சிறு கட்டுரை எழுத முயற்சி செய்யுங்கள்.