பாடசாலையில் சந்தை

தரம் 2 பாடம் 21.1

 

பாடசாலையில் சந்தை 

மாணவர்கள்:-   வாருங்கள்..... வாருங்கள்...... சத்துள்ள மரக்கறிகளும்   சுவையான பழங்களும் உள்ளன. வாருங்கள் வந்து வாங்குங்கள். வாருங்கள்! வாருங்கள்!

ஆசிரியர் 1:- என்ன மரக்கறிகள் இருக்கின்றன பிள்ளைகள் ?

மாணவன் 1:-  கத்தரிக்காய், வெண்டிக்காய், பூசணிக்காய்கள்   உள்ளன.

ஆசிரியர் 1:- எனக்கு பூசணிக்காய் ஒன்றும் கத்தரிக்காய் அரைக் கிலோவும் தாருங்கள்.

மாணவன் 1:- இதோ நீங்கள் கேட்ட காய்கறிகள். எண்பது ரூபாய் தாருங்கள்.

ஆசிரியர் 1:- நன்றி...

 

ஆசிரியர் 2:-  பிள்ளைகளே என்ன பழங்கள் உள்ளன.

மாணவன் 2 :- வாழைப்பழம், அன்னாசிப்பழம், பப்பாசிப்பழம், மாதுளம்பழம் என்பன உள்ளன.

ஆசிரியர் 2:- இவற்றின் விலைப்பட்டியலைக் காட்டுங்கள்.

மாணவன் 2:- இதோ உங்களுக்குத் தெரிவது போல் நான் எழுதி வைத்துள்ளேன்.

ஆசிரியர் 2:- சரி எனக்கு ஒரு பப்பாசிப்பழமும் மாதுளம்பழமும் தாருங்கள்.

மாணவன் 2:- இந்தாருங்கள் நீங்கள் கேட்ட பழங்கள். ஐம்பது ரூபாய் தாருங்கள்.

ஆசிரியர் 2:- நன்றி