கொன்றை வேந்தன்

தரம் 2 பாடம் 23.1

 

கொன்றை வேந்தன்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

2. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

3. கிட்டாதாயின் வெட்டென மற.

4. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

5. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

6. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.

7. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

8. மருந்தேயாயினும் விருந்தோடு உண்.

9. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

10. மூத்தோர் சொன்னவார்த்தை அமிர்தம்.