பேச்சு மொழி
தரம் 7 பாடம் 1:2.3
பேச்சு மொழி
மொழியின் உயிர் நாடியாக விளங்குவது பேச்சு மொழியே என்பர். பேச்சுமொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல் மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.