கிளைமொழி
தரம் 7 பாடம் 1:2.6
கிளை மொழி
ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதும் உண்டு. வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறையும். மேலும் அரசியல், சமயம், தொழில், பொருளாதாரம் போன்றவற்றாலும் அம்மொழி பேசும் மக்களுக்கு இடையே தொடர்பு குறைந்து போகிறது. இம்மாற்றங்கள் மிகுதியாக அவர்களிடையே நிலவும் மொழி வழக்கு புதிய மொழிகளாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழியைக் கிளைமொழி என்பர். கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் ஆகும்.