தெரிந்துகொள்வோம்.

தரம் 7 பாடம் 1:3.1

 

தெரிந்து கொள்வோம்.

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்கு தொடர்புகளுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை தெரிந்து கொள்வோம்.

உதாரணம் 

  பேச்சு மொழி – அம்மா பசிக்கிது எனக்கு சோறு வேணும்.

  எழுத்துமொழி – அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு          வேண்டும்.

 

எழுத்து வழக்கு           பேச்சு வழக்கு   

1. கோர்த்து                              கோத்து                 

2. சுவற்றில்                              சுவரில்                 

3. நாட்கள்                                 நாள்கள்                                    

4. பதற்றம்                                பதட்டம்                                

5. செலவு                                   சிலவு                                 

பேசும் போது சில நேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. 'ஆ' என்னும் எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களையும் பார்ப்போம்.

 

உதாரணம்

  சொல்லு – சொல்     

  வந்தியா – வந்தாயா?

  நில்லு – நில்

  சாப்பிட்டியா  - சாப்பிட்டாயா?