சின்னச் சின்ன எறும்புகள்

தரம் 7 பாடம் 2:1.1

 

சின்னச் சின்ன எறும்புகள்

 

ஊர்ந்து சின்ன எறும்புகள்
ஊர்வலமாய் போகுது 
தூர்ந்த நிலத்தைத் துளைத்துமே
தூக்கும் உணவைத் தேக்குது 

 

ஊர்ந்து செல்லும் அழகினை 
உற்று நோக்கிப் பாருங்கள் 
சேர்ந்து  சின்ன  எறும்புகள்  
செல்லும் திசையைத் தேடுங்கள்

 

இனிப்பை  நாடிச் சேர்த்திடும் 
இருப்பில் கொண்டு வைத்திடும் 
பனி மழையின்  காலத்தே 
பகிர்ந்து உண்டு வாழ்ந்திடும் 

 

சின்னஞ் சிறுவர் நாமுமே 
சிற்றெறும்பைப் போலவே   
சேர்ந்து சுறு  சுறுப்புடன் 
சேமிக்கவே பழகுவோம்.