வாக்கியம் அமைத்தல்

தரம் 7 பாடம் 3:2.1

 

வாக்கியம் அமைத்தல்

 

வாக்கியம் அமைத்தல் என்பது வாக்கிய உறுப்புக்களை முறையாக இணைத்து பொருள் தரும் வகையில் வாக்கியங்களை அமைத்தல் ஆகும். 

1. மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று பாடத்தைப் படித்தனர். 
இவ்வாக்கியத்தில்
எழுவாய் - மாணவர்கள்
செயப்படுபொருள் - பாடத்தைப்
பயனிலை - படித்தனர்

2. ஒரு வாக்கியத்தின் உறுப்புக்களாவன
எழுவாய் - கருத்து எழும் இடம்
செயப்படுபொருள் - இரண்டாம் வேற்றுமையை ஏற்கும் பெயர்சொல்.                                                         
                  பயனிலை - கருத்து முற்றுப்பெறும் இடம்.

3. வாக்கியம் ஒன்றை எழுதும் பொழுது எழுவாய், பயனிலை என்பனவற்றுக்கிடையில் திணை, பால், எண், இடம், காலம் என்பனவற்றின் இயையு கவனிக்கப்படல் வேண்டும்.

அடைமொழிகள் 
வாக்கிய உறுப்புக்களை விளக்கியும் விபரித்தும் எழுதுவதற்கு பயன்படுவதே அடைமொழிகள் ஆகும். 
சுகந்தன் கீரையைப் பிடுங்கினான். இவ்வாக்கியத்தை அடைமொழியுடன் எழுதும்போது கள்ளச் சுகந்தன் வாடிய கீரையை வேரோடு பிடுங்கினான்.