மாதிரிக் கடிதம்
தரம் 7 பாடம் 6:2.1
மாதிரிக் கடிதம்
கடிதம் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1. கடிதத்தின் இடப்பக்க மேல் மூலையில்அனுப்புனர் அல்லது விடுநர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
2. அடுத்து அதன் கீழே பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
3. யாருக்குக் கடிதம் அனுப்பப்படுகின்றது என்பதைப் பொறுத்து எப்படி அழைப்பது என்று முடிவு செய்து எழுத வேண்டும்.
-
தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரச அதிகாரி என்றால் மதிப்பிற்குரிய ஐயா/அம்மணி என அழைக்க வேண்டும்.
-
பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் அன்புள்ள என அழைக்க வேண்டும்.
-
வேறு வெளியாட்களாக இருப்பின் அன்புடையீர் என அழைக்க வேண்டும்.
4. தலைப்பு - கடிதத்தின் பொருள் என்ன என்பதை எழுத வேண்டும்.
5. உள்ளடக்கம் - நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதை சுருக்கமாக எழுத வேண்டும்.
6. இடது மூலையில் யாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்பதைப் பொறுத்து தங்களின் பணிவான, அன்பான, உண்மையான என்று எழுதிட வேண்டும்.