உவமைத் தொடர்கள்
தரம் 7 பாடம் 9:2.1
உவமைத் தொடர்கள்
நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவு படுத்தி தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர்.
இலைமறை காய் போல – மறைவான நிலை
ஊமை கண்ட கனவு போல – கூற முடியாத நிலையில் இருத்தல்.
கடன் பட்டார் நெஞ்சம் போல – மனக் கலக்கம் அடைதல்.
ஓடும் புளியம் பழமும் போல – ஒட்டுறவின்றி இணைந்திருத்தல்.
கனியிருக்கக் காய் கவர்ந்தது போல – நல்லவற்றை வெறுத்து தீயவற்றை நாடுதல்.
வாடும் பயிருக்கு வான்மழை போல – துன்பத்தில் அபயம்
தலையிருக்க வால் ஆடுவது போல – உரியவரை மீறிச் சார்ந்திருப்பவர் முன் நிற்பது
சிவபூசையில் கரடி புகுந்தது போல – நன்மைக்கு இடையூறு.