
அறிமுகம்
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவர்களே, வணக்கம்!
யாழம்மா இணையக்கல்வி ஊடாக, தமிழ் மொழியைக் கற்க வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
அனைவரும் தமிழ் மொழியை மிகவும் இலகுவாகக் கற்கவேண்டும் எனும் நல்ல நோக்கத்துடன் இவ்விணையப் பாடத் திட்டத்தை உங்களுக்கு வழங்குகின்றோம்.
ஓரளவு தமிழ் தெரிந்த மாணவர்கள் சுயமாகக் கற்றுக்கொள்ளலாம்.
ஏனையவர்கள் பெரியோரின் உதவியுடன் கற்றுக்கொள்ளலாம்.
யாழம்மா கல்வித்திட்டம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கு பாடத்தினை முழுமையாகக் கற்றுக்கொள்ளலாம்.
யாழம்மா கேள்வி பதில் தளத்திற்குச் சென்று பயிற்சிகளை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
யாழம்மாவின் பாடம் மற்றும் பயிற்சிகளை Google Chrome உலாவியூடாக இலகுவாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றோம்.
யாழம்மாவின் பாடத்திட்டங்கள் அனைத்தும் ஒலி மற்றும் படங்களை உள்ளடக்கியத் தொகுப்பாக உள்ளது. எனவே பொறுமையுடனும் ஆர்வத்துடனும் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற இடையூறுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
மிகவும் பழைய மென்பொருள் பாதிப்பு உள்ள கைத்தொலைபேசி, கணினி மற்றும் மடிக்கணினிகள் அல்லது மிகக்குறைந்த இணைய வேகம் என்பவை கற்றலுக்கு இடையூறு விளைவிக்கலாம்.
பாடம் மற்றும் பயிற்சிகள் தொடர்பாக உங்கள் அனைத்துக் கருத்துக்களும் எம்மால் உள்வாங்கப்படும். யாழம்மாவுடன் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி info@yazhamma.com, தொலைபேசி இலக்கம் 0041 76 544 09 63 (viber,whatsapp)
யாழம்மாக் குழுமம்