சந்தைக்குச் செல்வோம்.

தரம் 2 பாடம் 8.1

 

சந்தைக்குச் செல்வோம்

தாய் :- மகன், மகள் வாருங்கள் சந்தைக்குச் செல்வோம்.

பிள்ளைகள் :- சரி அம்மா போவோம்.

தாய் :- சரி வாங்க போவோம்.

சந்தைக்குச் சென்று வேண்டிய காய்கறி, பழங்களை வாங்குவோம்.

மகள் :- அம்மா எனக்குப் பப்பாசிப்பழம் பிடிக்கும்.

மகன் :- எனக்கும் பிடிக்கும் அம்மா. பப்பாசிப் பழத்தில் பல நன்மைகள் உண்டு எனவும், அது நம் உடலுக்கு நன்மை தரும் எனவும் ஆசிரியர் கூறினார் அம்மா.

மகள் :- ஆமாம் அம்மா, பப்பாசிப் பழத்தில் விற்றமின் ‘சி', ‘ஈ'  உள்ளது. என நானும்  படித்தேன் அம்மா. 

அம்மா :- சரி பிள்ளைகளே, நீங்கள் விரும்பிய பழத்தை வாங்குவோம். ஆனால் பழத்தில் மட்டும் விற்றமின் இல்லை, காய்கறியிலும்  நிறைய விற்றமின்கள் உண்டு.

மகள் :- எந்தெந்த காய்கறியில், என்னென்ன விற்றமின் உண்டு அம்மா?

மகன் :- எனக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது. சொல்லுங்கள் அம்மா.

அம்மா :- இதோ பாருங்கள் பிள்ளைகளே, கீரைவகைகள் இருக்கின்றன.

அனைத்து சத்துக்களும் கீரை வகையில் உள்ளன. முளைக்கீரையில் விற்றமின் ‘ஏ', அகத்திக்கீரையில் ‘கல்சியம்‘, முருங்கைக்கீரையில் விற்றமின் ‘சி யும் இரும்புச் சத்தும்‘ உள்ளன.

மகள் :- ஆமாம் அம்மா முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளன எனவும் அது கண்ணுக்கு மிகவும் நல்லது எனவும் ஆசிரியர் கூறினார்.

அம்மா:- ஆமாம் மகள். கரட்டில் விற்றமின் ‘ஏ‘ உள்ளது. அதனையும் வாங்குவோம்.

கள் :- சரி அம்மா இப்படியான சத்தான காய் கறிகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

அம்மா :- தேவையான  காய்கறிகளை வாங்கிவிட்டோம்.

வாருங்கள் வீடு செல்வோம்.

பிள்ளைகள் :- சரி அம்மா.