கண்ணாமூச்சி

தரம் 2 பாடம் 15.1

 

கண்ணாமூச்சி 

இதுவொரு குழுவாக விளையாடும் விளையாட்டு ஆகும். குழந்தைகள் விளையாடுபவர்களில் மூத்த வயதுடையோரைத் தலைவராகத் தேர்வு செய்வர். பின் ஆட்டம் தொடங்கும். தலைவர் குழுவிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்வார். அவரைப் பட்டவர் என அழைப்பர். பின் தலைவர், தேர்வு செய்த பட்டவரின் கண்களை மூடிக்கொள்வார். உடனே மற்றக் குழந்தைகள் அனைவரும் ஒளிந்து கொள்வர். அப்போது தலைவர்      

 கண்ணாமூச்சி ரே  ரே,

 காரேமுட்டே ரே ரே,

 ஒரு முட்டையை தின்று புட்டு,

 ஊளை முட்டையைக் கொண்டுவா!

என்று பாடி அக்குழந்தையின் கண்களைத் திறந்து விடுவார். பின்பு அந்தப் பட்டவர், ஒளிந்திருக்கும் மற்றக் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பட்டவராக வருபவரின் கண்களில் படாமல் பதுங்கிச் சென்று தலைவரைத் தொடும் குழந்தைகள் பழமாவார்கள்.

மாணவர்களே, இந்த விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகின்றேன். நீங்களும்  உங்கள் நண்பர்களுக்குக் கூறி ஒன்றாகச் சேர்ந்து  விளையாடுங்கள்.