செய்தி வாசிப்போம்
தரம் 2 பாடம் 13.1

செய்தி வாசிப்போம்
வணக்கம் நண்பர்களே!
செய்தி வாசிப்பது மீனா.
இன்றைய செய்திகள் மான்கள் பற்றியது.
இவைகள் விலங்குகளுக்குள் அடக்கப்படுகின்றன,
அடர்ந்த காடுகளிலேயே மான்கள் வாழ்கின்றன,
இவைகள் நான்கு கால்களைக் கொண்ட
வேகமாக ஓடக் கூடிய விலங்குகளாகும்.
மான்களுக்கு விருப்பமான உணவு எது என்றால்
அது இலை குழைகள் தான்.
பசி தீரும் வரை அதனையே விரும்பி உண்ணும்.
மான்கள் கன்றுகளை ஈன்று பாலூட்டி வளர்க்கும்.
இவை கூட்டமாகவே வாழும் விலங்குகளாகும்.
காடுகள் இல்லா விட்டால் இவைகள் இல்லை.
மனிதர்களால் காடுகள் அழிக்கப்படுதல் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுதல் போன்றவற்றாலே காட்டு வாழ் உயிரினங்கள் அதிகம் அழிவடைகின்றன.
எனவே பிள்ளைகளே நாமும் உயிர்களிடத்தில் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.