என் தோட்டம்
தரம் 3 பாடம் 3.1
என் தோட்டம்
குட்டைக் குட்டைக் கத்தரிக்காய்
குண்டுக் குண்டுச் சுண்டங்காய்
நெட்டை நெட்டை முருங்கைக்காய்
நீண்டு தொங்கும் புடலங்காய்
சட்டி பானை போலவே படுத்திருக்கும் பறங்கிக்காய்
பட்டை போட்ட வெண்டைக்காய்
பச்சை நிற பாவற்காய்
சொட்டை இல்லா சுரைக்காய்
சொக்கும் நல்ல தக்காளி
கொடியில் தொங்கும் அவரைக்காய்
கொவ்வை நிற மிளகாய்
வாட்ட சாட்ட வாழைக்காய்
வந்து பார் என் தோட்டத்தில்!
வந்து பார் என் தோட்டத்தில்!