மறவாதே
தரம் 3 பாடம் 4.1

மறவாதே
அன்பைப் பொழியும் தாயை மறவாதே.
அரவணைக்கும் தந்தையை மறவாதே.
கற்ற கல்வியை மறவாதே.
கற்பித்த குருவை மறவாதே.
படைத்த இறைவனை மறவாதே.
பண்பாய் நடக்க மறவாதே.
ஒழுக்கம் பேண மறவாதே.
உண்மை பேச மறவாதே.
நல்லவர் சொல்லை மறவாதே.
நம் கலாசாரத்தை மறவாதே.
நம் இனிய நாட்டை மறவாதே.
நம் இனிய நாட்டை மறவாதே.