அந்த இடம்

தரம் 3 பாடம் 5.1

 

அந்த இடம் 

அன்றொருநாள்

ஆசிரியர் அழைத்துச் சென்றார்

அங்கு ஓர் இடம் – அங்கே 

அடர்ந்த காடு, உயர்ந்த மரங்கள் 

விலங்கு, பறவை நிறைந்து இருந்தன.

 

அழகு மயில் தோகை விரித்து ஆடி நின்றது

குரங்கு ஒன்று கூச்சல் இட்டு ஓடித் திரிந்தது

நீர் நிலைகள் தோறும் கொக்கு நிறைந்திருந்தன

அவை மீன்களைப்  பிடித்து கொத்தித் தின்றன.

 

பறவைகளும் கூட்டம் கூட்டமாய் கூடித் திரிந்தன

யானைக் கூட்டம்  குட்டிகளுடன் நீரைக் குடித்தன

பாம்பு துரத்த தவளை ஒன்று பயந்து ஓடியது

பார்த்து நான் அதனையே மகிழ்ந்து நின்றேன்.

 

மகிழ்ச்சியாய் பறவையினமும் விலங்குகளும் வாழ்ந்து வந்தன

பல பல பாடங்கள் எமக்கு சொல்லித் தந்தன

நான் சென்ற இடமுனக்குப் புரிந்து விட்டதா

சிங்கராஜ வனம் தான் வேறு ஒன்றும் இல்லை.