காற்று
தரம் 3 பாடம் 7.1
காற்று
இதமாக வீசும் காற்று
சுவாசம் தரும் இன்பக் காற்று
சுகமாய் இசையை எழுப்பும் காற்று
மனமகிழ்ச்சி தருகிறது.
மழை காலம் குளிர் காற்று,
வெயில் காலம் வெப்பக் காற்று,
இசையை எழுப்பும் மூங்கில் மரத்தை
அசைய வைக்கும் அழகிய காற்று.
பட்டங்களை மிதக்க வைக்கும் காற்று
எங்கும் நிறைந்து இருக்கும் காற்று
இதமாக எனைத் தழுவும் காற்று
சுவாசம் தரும் இன்பக் காற்று.
- கி.ஜெனிற்றா -