மழைக்காட்சி
தரம் 3 பாடம் 8.1

மழைக்காட்சி
அன்று விடுமுறை நாள். காலைப்பொழுது வேளையில் பறவைகள் மற்றும் மிருகங்கள் உணவு தேடச் சென்றன. அப்போது திடீரென வானம் கறுத்தது, காற்று பலமாக வீசியது, மேகக்கூட்டங்கள் கருமையாய் காணப்பட்டன. உணவு தேடச் சென்ற பறவைகள் மற்றும் மிருகங்கள் உடனே தங்கள் இடத்திற்குத் திரும்பின. மழையோ சோவெனப் பெய்தது.
என் வீட்டு முற்றத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைப் பார்க்க என் அயல் வீட்டு நண்பர்கள் வந்தனர். வெள்ளத்தில் சிறு கப்பல் செய்து விளையாட நாங்கள் ஆசைப்பட்டோம். ஒவ்வொருவரும் கப்பல் செய்து தண்ணீரில் விட்டோம். அது மிதக்கும் அழகைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தோம்.
பின்னர் அப்பா என்னையும் என் நண்பர்களையும் வீதி ஓரம் அழைத்துச் சென்றார். அங்கு குட்டைகளில் நீர் தேங்கிக் காணப்பட்டது. அதில் சிறு சிறு மீன்களையும், தவளைகளையும் கண்டோம். அவை மிகவும் அழகாக ஓடித்திரிவதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தோம். அப்போது எங்கள் அனைவரையும் அம்மா உணவு உண்ண அழைத்தார். நாங்கள் கை, கால்களைக் கழுவி விட்டுச் சாப்பிடத் தயாரானோம்.