நான் வளர்க்கும் பூந்தோட்டம்
தரம் 3 பாடம் 9.1
நான் வளர்க்கும் பூந்தோட்டம்
அழகு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அழகாக இருக்கத்தான் எல்லோரும் விரும்புவோம். அதைப் போலத்தான் நம் வீட்டையும் அழகாக வைத்திருப்பது நம் கடமையாகும். நம் வீட்டையும் சூழலையும் அழகாக வைத்திருக்க அழகிய பூந்தோட்டம் வளர்ப்பது நன்று. அதே போன்ற அழகிய பூந்தோட்டம் என் வீட்டில் உள்ளது.
அதில் வண்ணப் பூக்கள் பல நிறங்களில் உள்ளன. அது சோலையாக இருக்கும் அதில் வண்ணப் பட்டாம்பூச்சிகள் தேன் குடிக்க வரும் அதனைக் காண மிகவும் அழகாக இருக்கும். காற்று வீசும் போது வருகின்ற பூக்களின் வாசனை புது சுவாசத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
என் தோட்டத்தைக் காண அனைவரும் வருவார்கள். இப்படியான இயற்கைக் காட்சியைப் பார்த்து ரசிப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது. இதனால் பல நன்மைகள் கிடைக்கும். அதாவது இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியான பல பிரச்சனைகள் வராமல் தடுக்க இப்படியான இயற்கையைப் பேணி நலம் பெறுவோம்.