கண்ணுறங்கு கண்ணுறங்கு
தரம் 4 பாடம் 1.1
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணான கண்ணே என் கண்மணியே
கனவுகள் நனவாகும் கண்ணுறங்கு
பொன்னான காலங்கள் கூடி வரும்
பொறுமையாய் நீதானும் கண்ணுறங்கு.
பூவே என் பொக்கிசமே
பூங்காற்று வீசுதம்மா கண்ணுறங்கு.
புயல்தானும் வந்தாலும் கலங்காதே
புண்ணியங்கள் காத்து நிற்கும் கண்ணுறங்கு.
புன்னகைக்கும் பொன் எழிலே
புன்சிருப்பில் நோய் அகலும் கண்ணுறங்கு.
பொல்லாத வஞ்சகரும் போயிடுவார்
பொன்னாகப் பூமி மாறும் கண்ணுறங்கு.
- அருள்ஜோதி -