இயற்கை

தரம் 4 பாடம் 4.1

 

இயற்கை 

இயற்கை என்பது இயல்பாக இருப்பது எனப் பொருள் படும். இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைத்தே 'இயற்கை' என்கிறோம்.


ஒவ்வொரு நாட்டின் தட்ப, வெட்ப நிலைக்கேற்ப அங்கு காணப்படும் தாவரங்களும் வித்தியாசப்படும். மிருகங்களும், பறவைகளும் கூட வித்தியாசமாக இருக்கும். பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலமானது, இயற்கையாகவே பல மேடு பள்ளங்களையும், மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், அடர்ந்த மலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  சல சலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் இவைகளைத் தன்னுடன் அரவணைத்து வனப்புடன் திகழும் வனங்கள் போன்ற பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.  


ஆனால் இந்த நவீன யுகத்தில் மலைகளைச் சரிப்பது, காடு மேடுகளையெல்லாம் அழிப்பது, கழிவுகளைக் கண்ட இடங்களிலெல்லாம் குவிப்பது என இயற்கையை அழித்து வருகின்றனர். இயற்கையோ  'எங்களை அழித்து விடாதீர்கள்' என்று கூறுவது போல், இயற்கை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? என்பதை நினைவூட்டும் வகையில் அவ்வப்போது நிலநடுக்கம், கனத்த மழை,  புயல் காற்று என வந்து மிரட்டிக் கொண்டிருக்கின்றன. 


எனவே பிள்ளைகளே இயற்கையைக் காத்து எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்.  வருங்காலச் சமுதாயத்தை வளமுடன் காக்க, இயற்கையைப் போற்றி வாழ்வோம். இனியதோர் உலகத்தைப் படைத்துக் காட்டுவோம்.