எங்கள் ஊர் அங்காடி
தரம் 4 பாடம் 5.1
எங்கள் ஊர் அங்காடி
எங்கள் ஊரின் சந்தையிலே
எல்லாப் பொருளும் வாங்கலாம்.
வாரம் ஒருநாள் அங்காடியில்
வந்து ஒன்றாய்க் கூடுங்கள்.
பேரம் பேசிச் சாமான்களைப்
பிரியம்கொண்டே வாங்கலாம்.
வாரம் ஒன்றே ஆனாலும்
வாங்கிச் சாமன் செல்லலாம்.
நல்ல நல்ல பொருளையெல்லாம்
நயமாய் அங்கே வாங்கலாம்.
உள்ள காசுக் கேற்றபடி
உகந்த பொருளை வாங்கலாம்.
இரைச்சல் அங்கே ஏகம் வரும்
இன சனங்கள் கூடி நிற்கும்.
நெரிசல் நிறைந்த வேளையிலும்
நெருங்கி நண்பர் பேசுவர்.
ஊரிற் காணா உறவெல்லாம்
உடன் கண்டு கதைக்கலாம்.
காரில் நடையில் வந்துமே
கலந்து நலங்கள் கேட்கலாம்.
அப்பா அம்மாவோடு நானும்
அந்தச் சந்தைக்குப் போயுமே
ஆசைப்பட்ட சாமானெல்லாம்
அங்கே தேடி வாங்குவேன்.
- வில்லூரான் -