வரமாகும் மரங்கள்
தரம் 5 பாடம் 1:1

வரமாகும் மரங்கள்
இனிய நிலாக்கால இரவொன்றில்
குடமெடுத்து நீரூற்றிக் கொண்டிருந்தேன்
நான் வைத்த சிறு செடிகளுக்கு.
செடிகள் சிரித்தன நிலவொளியில்
செடிகள் செழித்தன நீரின் குளிர்மையில்
மனம் குளிர்ந்தது அவற்றின் வளர்ச்சியில்.
நிலவு பொழிகிறது எம் வீட்டு முற்றத்தில்
உள்ளம் மகிழ்கிறது பால் நிலவில்
உவகை கொள்கிறது செடிகளின் உயர்ச்சியில்.
சிறிய செடிகளுக்குத்தான் நீரூற்றினேன்
என் தேசமெங்கும் நாளை சோலைவனம்
வனமல்ல இது நாளைய மழை வளம்.