பெண்கல்வி

தரம் 5 பாடம் 8:2

 

பெண் கல்வி 

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!

 

சிலை போல ஏனங்கு நின்றாய்? – நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?

விலை போட்டு வாங்கவா முடியும்? – கல்வி

வேளை தோறும் கற்று வருவதால் படியும்!

மலை வாழை அல்லவோ கல்வி? – நீ

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

 

படியாத பெண்ணாயிருந்தால் – கேலி  

பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்

கடிகாரம் ஓடும் முன் ஓடு! – என்

கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு

கடிதாய் இருக்குமிப்போது! – கல்வி

கற்றிடக் கற்றிடத் தெரியுமப்போது!

 

கடல் சூழ்ந்த இத்தமிழ் நாடு – பெண்

கல்வி பெண் கல்வி என்கின்ற தன்போடு.

 

                                        - பாவேந்தர் பாரதிதாசன்-

 

ஆசிரியர் குறிப்பு

பெயர்                              -              பாரதிதாசன்

இயற்பெயர்                   -              சுப்புரத்தினம்

ஊர்                                  -              புதுச்சேரி

பெற்றோர்                      -              கனகசபை,

                                                          இலக்குமி அம்மையார்

காலம்                              -               29-04-1891 முதல்

                                                           21-04-1964 வரை

சிறப்புப் பெயர்கள்      -               பாவேந்தர், புரட்சிக்கவிஞர்