லகர, ழகர, ளகர, பொருள் வேறுபாடு
தரம் 6 பாடம் 1:6.2

அலகு - பறவையின் மூக்கு, ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு – சேவல், பெண்கூகை
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை – பாடுபடு, பக்கம், கலைமான்
கலகம் – போர், அமளி, இரைச்சல்
கழகம் – சங்கம், கூட்டமைப்பு
காலை – பொழுது, விடியற்பொழுது
காளை – காளைமாடு, இளைஞன்
கிலி – அச்சம், பயம்
கிழி – கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
கிளி – பறவை, வெட்டுக்கிளி
குலி - மனைவி
குழி – பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
குளி –நீராடு
கொல்லை – புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை – திருடுதல், மிகுதி
கோலம் – அழகு, அலங்காரம்
கோளம் – உருண்டை, வட்டம்
தழை - தாவர உறுப்பு
தலை – சிரம்
தோலன் - அற்பன்
தோழன் – நண்பன்
நாலம் - பூவின் காம்பு
நாழம் – இழிவுரை, வசவு
நாளம் – பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்