எழுத்துக்களின் வகை, தொகையை அறிதல்
தரம் 6 பாடம் 3:1.3
எழுத்துக்களின் வகை, தொகையை அறிதல்.
உயிர் எழுத்துக்கள் – 12
மெய் எழுத்துக்கள் – 18
உயிர்மெய் எழுத்துக்கள் - 216
ஆய்த எழுத்து - 1
மொத்தம் = 247
உயிர் எழுத்துக்கள்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓள ஆகிய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்து எனப்படும். இவற்றை இரண்டாக பிரிக்கலாம்.
1. குறில் - அ, இ, உ, எ, ஒ
2. நெடில் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள
மெய் எழுத்துக்கள்
இதனை மூன்றாகப் பிரிக்கலாம்.
1. வல்லின மெய் - க், ச், ட், த், ப், ற்
2. மெல்லின மெய் - ங், ஞ், ண், ந், ம், ன்
3. இடையின மெய் - ய், ர், ல், வ், ழ், ள்
உயிர்மெய் எழுத்துக்கள்
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்து உருவாக்கப்படும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எனப்படும். அவ்வாறு உருவாகும் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 ஆகும்.
உதாரணம்
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
ட் + உ = டு
ல் + ஓ = லோ
ந் + அ = ந
இவ்வாறு 18 மெய்களும் 12 உயிருடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகும்.
ஆய்த எழுத்து – ஃ