சொற்றொடர்

தரம் 6 பாடம் 4:3.1

 

சொற்றொடர் 

சொற்றொடர் என்பது வாக்கியத்தின் ஓர் உறுப்பு ஆகும். இது ஒரு சொல்லாகவும், சொற்களின் தொகுதியாகவும் அமையலாம்.
 
எடுத்துக்காட்டு 
பூ - பெயர்த்தொடர் 
படித்தான் – வினைமுற்றுத்தொடர் 
வாக்கியங்களிலும் சொற்றொடரை நாம் அவதானிக்கலாம்.
 
எடுத்துக்காட்டு 
அம்மா சோறு சமைத்தாள். 
இங்கு அம்மா என்பது எழுவாய்த்தொடர் 
சோறு சமைத்தாள் என்பது வினைமுற்றுத்தொடர் 
 
வாக்கியம் 
சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்கேற்ப ஒன்றுடன் ஒன்று அமைப்பு ரீதியாக இணைந்து முழுமையான பொருள் தருமாயின் அதனை வாக்கியம் என்பர்.
 
எடுத்துக்காட்டு
கவிதை அக்கா எழுதிக் கொண்டிருக்கிறாள் ஒரு 
(இது பொருள் உள்ள வகையில் அமையவில்லை. எனவே இது ஒரு பூரண வாக்கியம் அல்ல) 
இதனை பொருள் புலப்படும் வகையில் முறையாக அமைக்கும் போது இவ்வாறு அமைகிறது. 
அக்கா ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாள்.
 
வாக்கியங்களின் வகைகள் 
வாக்கியம் என்றால் என்ன என்பதை ஞாபகப்படுத்திக்கொள்க.
இனி வாக்கியங்களின் வகைகளைப் பார்க்கும் போது,
அவற்றின் அமைப்பை அடிப்படையிலேயே பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தனி வாக்கியம் 
2. கூட்டு வாக்கியம் 
3. கலப்பு வாக்கியம்
 
வாக்கியங்களின் இயல்பை அறிவோம் 
1. வாக்கியங்கள் பெரும்பாலும் எழுவாய், பயனிலை என்ற இரு அம்சங்களைக் கொண்டு அமைதல் அவசியம். 
 
 
எடுத்துக்காட்டு
சூரியன் உதிக்கிறது.
2. அவ்வாறு அமையும்போது திணை, பால், எண், இடம், காலம் என்ற இலக்கணக் கூறுகளின் தொடர்பினை அது பெற்றிருக்கும். இவைகளே வாக்கியங்களின் இயல்பாகும். இவ்வாறான வாக்கிய இயல்புகளை வைத்துக்கொண்டு வாக்கியங்களை இயைபுற எழுதுதல் அவசியமாகும்.