பந்தி அமைத்தல்

தரம் 6 பாடம் 11:2.1

 
ஒருவர் தான் கூற வந்த கருத்தைத் தெளிவாக எடுத்துரைப்பதற்கு பந்தியமைப்பு முக்கியமாகின்றது. கருத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் வாசிப்போர் மனதில் கருத்துக்கள் இலகுவில் பதியவும் பந்தியமைப்பு அவசியமாகின்றது.
 
பந்தி ஒன்றை அமைப்பதற்கான படிமுறை 
 குறித்த விடயம் பற்றிய குறிப்புக்களை வாக்கியங்களாக எழுதுதல் 
 வாக்கியங்களை ஒழுங்குபடுத்தல் 
 ஒழுங்கமைத்த முறைக்கேற்ப வாக்கியங்களை இணைத்தல்
 வாசகர் மனதில் பதியும்படியான பந்தியை அமைத்தல் 
 
பந்தியின் பண்புகள் 
 தலைமைப் பொருளைக் கொண்டிருத்தல். 
 துணைக் கருத்துக்களைக் கொண்டிருத்தல்
 கருத்துத் தொடர்பைக் கொண்டிருத்தல் 
 
பந்தி ஒன்றில் தவிர்க்கப்பட வேண்டியவை 
 கூறியது கூறல்
 மிகைபடக்கூறல்
 முன்னுக்குப் பின் முரணாகக் கூறல்
 சொல்ல வந்த பொருளைத் தவிர்த்து வேறு ஒரு பொருளைப் பற்றிக்கூறல்