மூதுரை

தரம் 4 பாடம் 11:1.3

 

மூதுரை

வெண்பா : 3
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

 

விளக்கம் 
இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.