மூதுரை
தரம் 4 பாடம் 11:1.5
மூதுரை
வெண்பா : 5
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.
விளக்கம்
கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் காரியங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.
