வினைச்சொல்லை விரிவாக விளங்கிக்கொள்ளல்-02

வினைச்சொல் சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சுருக்கமாக அறிதல்-02

1.வினையெச்சம் என்றால் என்ன? 

பால் காட்டும் முற்று ,விகுதி பெறாத குறைச் சொல்லாய் அமைந்து வினைச் சொல்லை முடிக்குஞ் சொல்லைக் கொண்ட எச்சம்  வினையெச்சம் எனப்படும். 

(உ+ம்): வந்து போனான். 

 

2. பெயரெச்சம் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். 

அவையாவன:

1) தெரிநிலை வினைப் பெயரெச்சம் 

    உ+ம்: உண்ணாத குதிரை

2) குறிப்பு வினைப் பெயரெச்சம் 

    உ+ம்: கரிய குதிரை 

 

3.பெயரெச்ச வாய்பாடுகள் எவை?

1) செய்த 

    உ+ம்: படித்த கண்ணன்.

2) செய்கின்ற 

    உ+ம். படிக்கின்ற கண்ணன்.

3) செய்யும் 

    உ+ம்: படிக்கும் கண்ணன். 

 

4.வினையெச்சம் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:

1) தெரிநிலைவினை வினையெச்சம்             உ+ம்:      உண்டு போனான் 

 2) குறிப்புவினை வினையெச்சம்                    உ+ம்:     சிரித்து நின்றான். 

 

5. வினையெச்ச வாய்ப்பாடுகள் எவை? 

1) செய்து 

     உ+ம்: படித்து முன்னேறினான். 

2) செய -

     உ+ம்: படிக்க முன்னேறுகிறான். 

3) செயின் 

    உ+ம்: படிப்பின் முன்னேறுவான். 

 

6.முக்காலமும் உணர்த்தும் வினையெச்ச வாய்ப்பாடு எது?

செய் 

உ+ம்:     மழை பெய்ய நெல் விளைந்தது -  இறந்தகாலம் 

               சூரியனுதிக்க வந்தான் -  நிகழ்காலம் 

               நெல் விளைய மழை பெய்யும் -  எதிர்காலம்

 

7.இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும் குறிப்புவினை முற்றுக்கள் எவை? 

 வேறு, இல்லை, உண்டு 

 உ+ம்:

 இரு திணை    -     அவன் வேறு, அவள் இல் லை, அவர்கள் உண்டு 

                                 அதுவேறு, அது இல்லை, அது உண்டு

                                 

 ஐம்பால்   -             அவன் இல்லை, அவள் இல்லை , அவர் இல்லை ,

                                  அது இல்லை, அவை இல்லை. 

                                  அவன் உண்டு, அவள் உண்டு, அவர் உண்டு,

                                  அது உண்டு, அவை உண்டு.

 

மூவிடம்     -           நான் வேறு, நீ வேறு, அவன் வேறு       

                                  நான் இல்லை, நீ இல்லை, அவன் இல்லை

                                  நான் உண்டு, நீ உண்டு, அவன் உண்டு 



8.செய்வினை என்றால் என்ன? 

 “படு" விகுதி புணராத முதன் நிலை அடையாகத் தோன்றி எழுவாய்க் கருத்தாவைக் கொண்டு வரும் வினை செய்வினை எனப்படும். 

  உ+ம்: கண்ணன் குழலை ஊதினான்.

 

9.செயப்பாட்டு வினை என்றால் என்ன? 

 "படு" விகுதி புணர்ந்த முதனிலை அடையாகத் தோன்றி மூன்றாம் வேற்றுமையிலும், செயப்படுபொருள் எழுவாயிலும் வரும் வினை செயப்பாட்டு வினை எனப்படும்.

  உ+ம்: கண்ணனால் குழல் ஊதப்பட்டது. 

 

10. மூவிட வினை என்றால் என்ன?

   தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடங்களிலும் முற்றுப் பெற்று நிற்கும் வினை மூவிட வினை எனப்படும்.

    உ+ம்: வந்தேன், சென்றாய், செய்தான் 

 

மேலும் பாடங்கள்