கதை கற்போம்

தரம் 1 பாடம் 2.1

 

நரியும் திராட்சையும்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அது பசியோடு அலைந்து திரிந்து  ஒரு கிராமத்தை வந்தடைந்தது. அங்கு ஓர் திராட்சைத் தோட்டத்தைக் கண்டது. அந்தத் தோட்டத்தில் திராட்சைப் பழங்கள் குலை குலையாகத் தொங்குவதைக் கண்டது. அந்த திராட்சைப் பழங்களைக் கண்டவுடன் நரியின் வாயில் எச்சில் ஊறத் தொடங்கியது. அதற்குப் பசியும் எடுத்தது. நரி திராட்சைப் பழங்களை உண்பதற்காக எட்டிப் பார்த்தது.

அதனால் பழங்களைப் பறிக்க முடியவில்லை. தொங்கித் தொங்கிப் பார்த்தது. ஆயினும் பழங்களைத் தொடக் கூட முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்ததும் அதனால் ஒன்றைக் கூட சாப்பிட முடியவில்லை. தன்னால் அப்பழங்களைப் பறிக்கவே முடியாது எனத்தெரிந்து கொண்டது. இனியும் நேரத்தை வீணடிப்பதை விரும்பாத நரி “சீச்சீ” இந்தப் பழம் மிகவும் புளிக்கும்”  எனக் கூறிக் கொண்டு அவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்கு உணவு தேடிச் சென்றது. 

“சிலர் தமது இயலாமையை மறைத்து, தமக்குக் கிடைக்காதவற்றைக் குறையாகக் கூறுவர்.”