விலங்குகள் பேசுகின்றன.
தரம் 2 பாடம் 14.5
எலி
நான் பொந்துகளில் வாழும் மிகச் சிறிய விலங்கு. நான் கூரிய பற்களைக் கொண்டவன். தானியங்களை விரும்பி உண்பேன். குட்டிகளை ஈன்று பால் கொடுத்து வளர்ப்பேன். காட்டெலி மற்றும் வீட்டெலி என சில வகைகள் எங்களில் உண்டு. நாங்கள் குடும்பமாக வாழ்வோம்.