விலங்குகள் பேசுகின்றன.
தரம் 2 பாடம் 14.4
எருமை
காட்டில் வாழும் என்னை சிலர் பால் மற்றும் இறைச்சிக்காக வீட்டிலும் வளர்ப்பர். பெரிய கொம்புகளைக் கொண்டிருக்கும் என்னைக் காண்பவர்கள் பயம் கொள்வர். கன்றுகளை ஈன்று பால் கொடுப்பேன். எனது பாலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, நான் இலை, குழைகளையே மிகவும் விரும்பி உண்பேன்.