விலங்குகள் பேசுகின்றன.

தரம் 2 பாடம் 14.1

 

சிங்கம்

நானே காட்டுக்கு ராஜா. நான் மிகக் கம்பீரமானவன். என்னைக் கண்டால் ஏனைய விலங்குகள் அனைத்தும் பயந்து ஓடும். இறைச்சியையே விரும்பி உண்பேன். குடும்பமாக வாழும் நான் குட்டிகள் மீது மிகப் பாசமாக இருப்பேன்.