விலங்குகள் பேசுகின்றன.

தரம் 2 பாடம் 14.2

 

யானை

நான் காட்டில் மிகப் பெரிய விலங்காவேன். எனக்கு அழகான தந்தம் காணப்படும். எனது துணையான பெண்யானைக்குத் தந்தம் காணப்படாது.  இலை குழைகளையே விரும்பி உண்பேன். பழங்களும் எனக்கு மிகப் பிடிக்கும். காடுகளுக்குள் கூட்டமாக வாழ்வேன்.