வேற்றுமை விளக்கம், அதன் உருபுகள் மற்றும் பொருள்களின் விளக்கங்களை அறிதல்-01

வேற்றுமை சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சரியாக அணுகுதல்-01

1.வேற்றுமை என்றால் என்ன? 

பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.

 

2.வேற்றுமையை ஏற்கும் சொற்களை எப்படி அழைப்பர்? 

பெயர்ச் சொற்கள் என்று அழைப்பர். 

 

3.எல்லாமாக எத்தனை வேற்றுமைகள் உள்ளன? அவை எவை? 

எட்டு வேற்றுமைகள் உள்ளன. 

அவையாவன:

முதலாம் வேற்றுமை 

இரண்டாம் வேற்றுமை 

மூன்றாம் வேற்றுமை 

நான்காம் வேற்றுமை 

ஐந்தாம் வேற்றுமை 

ஆறாம் வேற்றுமை 

ஏழாம் வேற்றுமை 

எட்டாம் வேற்றுமை
 

4.எல்லா வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டா? உருபுகள் உள்ள வேற்றுமைகள் எவை? 

இல்லை. உருபுகள் உள்ள வேற்றுமைகள் ஆறாகும். 

அவையாவன -  

(அதாவது 2-7 வரையான வேற்றுமைகள்)

இரண்டாம் வேற்றுமை 

மூன்றாம் வேற்றுமை

நான்காம் வேற்றுமை 

ஐந்தாம் வேற்றுமை 

ஆறாம் வேற்றுமை 

ஏழாம் வேற்றுமை

 

5.உருபேற்கும் வேற்றுமைகளையும் அவை ஏற்கும் உருபுகளையும் தருக.

உருபேற்கும் வேற்றுமைகள்                  ஏற்கும் உருபுகள் 

இரண்டாம் வேற்றுமை                                  ஐ

மூன்றாம் வேற்றுமை                                  ஆல், ஆன், ஒடு, ஓடு 

நான்காம் வேற்றுமை                                   கு 

ஐந்தாம் வேற்றுமை                                     இல், இன் 

ஆறாம் வேற்றுமை                                     அது, ஆது, அ 

ஏழாம் வேற்றுமை                                      கண், உள், இடம்.....

 

6. உருபேற்காத வேற்றுமைகள் எத்தனை? அவை எவை?

இரண்டு. 

அவையாவன:

முதலாம் வேற்றுமை 

எட்டாம் வேற்றுமை 

 

7.எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படும் வேற்றுமை எது? 

முதலாம் வேற்றுமை.

 

8. முதலாம் வேற்றுமையின் பொருள் யாது?

வினை முதலாதல் 

 

9. முதலாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் எவை?

ஆனவன்                உ+ம்:  கண்ணனானவன் வந்தான். 

ஆகின்றவன்        உ+ம்    கண்ணனாகின்றவன் வந்தான். 

ஆவான்                 உ+ம்:    கண்ணனாவான் வந்தான்.

என்பவன்             உ+ம்:     கண்ணன் என்பவன் வந்தான். 

 

10. இரண்டாம் வேற்றுமையின் உருபு, பொருள், சொல்லுருபுகளைத் தருக.

இவ்வேற்றுமையின் உருபு ஐ ஆகும். 

சொல்லுருபு இதற்கு இல்லை. 

பொருளுருபு ஆறுவகைப்படும். 

அவையாவன:

ஆக்கப்படுபொருள் (ஆக்கல்)            உ+ம்:     வீட்டைக் கட்டினான். 

அழிக்கப்படுபொருள் (அழித்தல்)     உ+ம்:     காட்டை எரித்தான். 

அடையப்படுபொருள் (அடைதல்)     உ+ம்:     நகரை அடைந்தான்

துறக்கப்படுபொருள் (துறத்தல்)      உ+ம்:     நாட்டைத் துறந்தான்.

ஒக்கப்படுபொருள் (ஒத்தல்)             உ+ம்:     புலியை ஒத்தான். 

உடைமைப்பொருள் (உடைமை)      உ+ம்:     பொன்னையுடையான்.

 

மேலும் பாடங்கள்