வேற்றுமை விளக்கம், அதன் உருபுகள் மற்றும் பொருள்களின் விளக்கங்களை அறிதல்-03

வேற்றுமை சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சரியாக அணுகுதல்-03

1.ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் எவை? 

நின்று, இருந்து என்பன சொல்லுருபுகளாகும். இவை "உம்" விகுதி பெற்றும், பெறாமலும் வரும். 

உ+ம்: 

ஊரின் நின்று போயினான்.

ஊரின் நின்றும் போயினான். 

ஊரில் இருந்து போயினான். 

ஊரில் இருந்தும் போயினான்.

 

2. ஆறாம் வேற்றுமையின் உருபுகள் யாவை?

உருபு அது, ஆது, அ என்பனவாகும். இவற்றில் அது. ஆது என்பன அஃறிணை ஒருமைக்கும், அ என்பது அஃறிணைப் பன்மைக்கும் வரும். 

உ+ம்:  

அது வந்தது

ஆ வந்தது (ஆ = பசு) ஒருமை 

பறந்தன பறவைகள் – பன்மை

 

3.ஆறாம் வேற்றுமையின் பொருள் எத்தனை வகைப்படும்? அவை எவை?  

இரண்டு வகைப்படும். அவையாவன: 

தற்கிழமைப் பொருள்  

பிறிதின்கிழமைப் பொருள்

 

4.தற்கிழமைப் பொருள் என்றால் என்ன? 

தன்னிலிருந்து வேறாக முடியாத தன்னோடு ஒற்றுமையுடைய பொருள் தற்கிழமைப் பொருள் எனப்படும். 

உ+ம் இராமனது தலை 

 

5.பிறிதின் கிழமைப் பொருள் என்றால் என்ன? 

தன்னிலிருந்து வேறான தனக்கு உடைமையாய் உள்ள பொருள் பிறிதின் கிழமைப் பொருள் எனப்படும். 

உ+ம்: இராமனது புத்தகம்

 

6.தற்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

ஆறு வகைப்படும். 

அவையாவன: 

உறுப்புத்தற்கிழமை                    உ+ம்:  கண்ணனது கண் 

பண்புத்தற்கிழமை                      உ+ம்:  கண்ணனது கருமை

தொழிற்தற்கிழமை                     உ+ம்: கண்ணனது வருகை 

ஒற்றன் கூட்டத்தற்கிழமை        உ+ம்:  நெல்லது குவியல் 

பலவின் கூட்டத்தற்கிழமை      உ+ம்:  படைகளது தொகுதி 

ஒன்று திரிந்து ஒன்றாபதன்      உ+ம்:  மஞ்சளது பொடி

 

7.பிறிதின் கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

மூன்று வகைப்படும். அவையாவன: 

பொருட் பிறிதின் கிழமை     உ+ம்:  முருகனது வேல்  

இடப் பிறிதின் கிழமை           உ+ம்:  தமிழரது நிலம்

காலப் பிறிதின் கிழமை        உ+ம்:  மாரனது வேனில்

 

8. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபு யாது?

உடைய என்பதாகும்.

உ+ம்: கண்ணனுடைய புத்தகம். 

 

9. ஏழாம் வேற்றுமையின் உருபு, பொருள் யாது?

உருபு கண், இல், உள், இடம் போன்றவையாகும்.

இதன் பொருள் இடப்பொருளாகும். 

 

10.ஏழாம் வேற்றுமையின் பொருள் எவ்வாறு இடப்பொருளைத் தருகிறது? 

இது ஆறுவகைப் பெயரையும் ஏற்று இடப் பொருளைத் தரும். 

உ+ம் : 

பொருள் இடமாதல்        உ+ம்:  மேசையில் உள்ளது புத்தகம்.  

இடம் இடமாதல்               உ+ம்:  இலங்கையிலுள்ளது கொழும்பு . 

காலம் இடமாதல்            உ+ம்:  நாளின் கண்ணுள்ளது மணித்தியாலம்.

சினை இடமாதல்            உ+ம்:  கையின் கண்ணுள்ளது விரல் 

குணம் இடமாதல்            உ+ம்:  கருமையிலுள்ளது அழகு 

தொழில் இடமாதல்        உ+ம்: ஆடலின் கண்ணுள்ளது சதி (ஐதி)

 

மேலும் பாடங்கள்