வேற்றுமை விளக்கம், அதன் உருபுகள் மற்றும் பொருள்களின் விளக்கங்களை அறிதல்-04

வேற்றுமை சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சரியாக அணுகுதல்-04

1.ஏழாம் வேற்றுமையின் இடப் பொருளானது எவ்விரு கிழமைப் பெயர்களுக்கும் இடமாய் நிற்கும்? 

தற்கிழமை 

பிறிதின்கிழமை

 

2.ஆறுவகைப் பெயர்களுடன் தற்கிழமைத் தொடர்பைக் கொண்ட பெயர்கள் எவை? 

சினைப் பெயர் 

குணப் பெயர் 

தொழிற் பெயர்

 

3.ஆறுவகைப் பெயர்களுடன் பிறிதின் கிழமைத் தொடர்பைக் கொண்ட பெயர்கள் எவை?  

பொருட் பெயர் 

இடப் பெயர் 

காலப் பெயர்

 

4.எட்டாம் வேற்றுமையின் உருபு, பொருள் யாது? 

எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. இதன் பொருள் "விளி" என்பதாகும். உ+ம்: மகனே வா!

 

5. விளிப் பொருள் என்பதன் பொருள் யாது? 

அழைத்தல் என்பதாகும்.
 

6. எட்டாம் வேற்றுமையின் உருபு எவ்விடப் பெயரில் வரும்?

படர்க்கைப் பெயரின் ஈற்றில் வரும்.

 

7.படர்க்கைப் பெயரின் ஈற்றில் வரும் என இனங்காணப்பட்டுள்ள உருபுகள் எவை? அவை அடையும் மாற்றங்கள் யாவை? 

ஏ மிகுதல்                                 உ+ம்    மகனே கேள் 

ஓ மிகுதல்                               உ+ம்    அப்பனோ உண்ணாய் 

ஈறு திரிதல்                           உ+ம்   நண்பா படி  

ஈறு கெடுதல்                       உ+ம்   தோழா கேள்  

ஈறு இயல்பாதல்                 உ+ம்     மக்காள் படியுங்கள்

 

8. வேற்றுமை மயக்கம் என்றால் என்ன?

ஒரு வேற்றுமையின் உருபு நிற்க வேண்டிய இடத்தில் வேறொரு வேற்றுமையின் உருபு நிற்றல் வேற்றுமை மயக்கம் எனப்படும்.

 

9.வேற்றுமை மயக்கம் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:  

உருபு மயக்கம் 

பொருண் மயக்கம்

 

10.உருபு மயக்கம் என்றால் என்ன? 

ஒரு வேற்றுமையின் உருபானது தனக்குரிய பொருளை இழந்து வேறொரு வேற்றுமையின் பொருளைத் தருமாயின் அது உருபு மயக்கம் எனப்படும். 

உ+ம் - முருகன் வேல் 

இது முருகனின் வேல் என 5ம் வேற்றுமைப் பொருளைத் தருவது போல் முருகனுடைய வேல் என 6ம் வேற்றுமைப் பொருளையும் தருமாயின் அது உருபு மயக்கம் எனப்படும்.

 

மேலும் பாடங்கள்