வினைச்சொல்லை விரிவாக விளங்கிக்கொள்ளல்-03
வினைச்சொல் சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சுருக்கமாக அறிதல்-03

1. மூவிட வினை முற்றுக்களுள் பால் காட்டாத வினை முற்றுக்கள் எவை?
தன்மை வினை முற்றுக்கள்
முன்னிலை வினை முற்றுக்கள்
2. வினை முற்றுக்களில் காலத்தைக் காட்டுவது எது?
வினை முற்றுக்களின் இடைநிலைகள்.
3.வினை முற்றுக்கள் விகுதியாலே எவற்றை உணர்த்துகின்றன?
எண்
இடம்
4. தன்மை வினை முற்றுக்கள் எவை?
1) தன்மை ஒருமை - கு, டு, து, று, அல், அன், என், ஏன்
2) தன்மைப் பன்மை - அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், றும்
5. முன்னிலை வினை முற்று விகுதிகள் எவை?
1)முன்னிலை ஒருமை - ஐ. ஆய், இ
2)முன்னிலைப் பன்மை - இர், ஈர், மின்
6.படர்க்கை வினை முற்று விகுதிகள் எவை?
அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், து
7. வினைச் சொற்கள் எவ்வாறு காலத்தைக் காட்டும்?
காலங் காட்டும் இடைநிலைகள் மூலமும், காலங் காட்டும் விகுதிகள் மூலமும் மற்றும் பகுதி இரட்டிப்பதன் மூலம் காலங் காட்டும்.
8. காலம் காட்டும் இடை நிலைகள் எவை?
1) இறந்த காலம் - த், ட், ற், இன், ன்
2) நிகழ்காலம் - ஆநின்று, கின்று, கிறு
3) எதிர்காலம் - ப், வ்
9. காலம் காட்டும் விகுதிகள் எவை?
1) இறந்த காலம் – து, டு, று, தும், டு, றும், ப
2) நிகழ்காலம் – கு, து, று, கும், தும், றும்
3) எதிர்காலம் – உம், மார், க, இய, இயர், அல்
10. பகுதி இரட்டிக்கும் வினைமுற்றுக்கள் எவை?
நகு, புகு, விடு, பெறு, தொடு