வினைச்சொல்லை விரிவாக விளங்கிக்கொள்ளல்-04

வினைச்சொல் சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சுருக்கமாக அறிதல்-04

1. உடன்பாட்டு வினை என்றால் என்ன?

  வினையொன்றால் குறிப்பிடப்படும் செயலொன்று நிகழ்ந்தமையைக் கூறும் வினை உடன்பாட்டு வினை எனப்படும்.

 ( உ+ம் ) கண்ணன் படித்தான்.

 

2 .உடன்பாட்டு வினையை வேறு எப்பெயரால் அழைக்கலாம்?

  விதிவினை என்றும் அழைக்கலாம்.

 

3. எதிர்மறை வினை என்றால் என்ன?

   வினையொன்றால் குறிப்பிடப்படும் செயலொன்று நிகழாமையைக் கூறும் வினை எதிர்மறை வினை எனப்படும்,

   உ+ம் : கண்ணன் விளையாடவில்லை.

 

4.எதிர்மறை வினையை வேறு எப்பெயரால் அழைக்கலாம்?

  மறைவினை என்றும் அழைக்கலாம்.

 

5. இக்கால வழக்கில் எதிர்மறை வினையை ஆக்க உதவும் சொற்கள் எவை?

  சென்றாள்           சென்றாள் அல்ல

  கண்டேன்            காணவில்லை

  செய்வேன்          செய்யமாட்டேன்

  வா                          வரவேண்டாம்

  அல்ல                     இல்லை

  மாட்டு                    வேண்டாம் (துணைவினை) 

 

6. தன்வினை என்றால் என்ன?

  எழுவாய் தானே ஒருசெயலைச் செய்தலைக் குறிப்பதாகிய வினை தன்வினை எனப்படும்.

  உ+ம் : வாணி எழுதினாள். 

 

7.பிறவினை என்றால் என்ன?

 எழுவாய் பிறர் ஒருவர் செயலைச் செய்ததாகக் குறிப்பிடும் வினை பிறவினை எனப்படும்.

 உ+ம்:  வாணி எழுதுவித்தாள்.

 

8.தன்வினை வாக்கியங்களைப் பிறவினை வாக்கியங்களாக மாற்றும் போது பின்பற்ற வேண்டியவை எவை? 

  தன்வினைப் பகுதிகளுடன் பிறவினை விகுதிகளான வி, பி, கு, சு, டு, து, பு, று என்பவற்றைச் சேர்த்தல் வேண்டும். 

   உ+ம் :  செய் - செய்வி 

                 படி - படிப்பி 

 

  தன்வினைப் பகுதி ஈற்றிலுள்ள உயிர் மெய்யின் மெய்யெழுத்துக்களை இரட்டிக்கச் செய்தல் வேண்டும். 

    உ+ம் : ஆகு - ஆக்கு

                 வாடு - வாட்டு 

 

 தன்வினையிலுள்ள மெல்லின மெய்யெழுத்துக்களை வல்லின மெய்யெழுத்துக்களாக மாற்றுதல் வேண்டும். 

  உ+ம்:  எழும்பு - எழுப்பு

              திருந்து - திருத்து 

 

9. ஏவல் வினை என்றால் என்ன?

 முன்னிலையிலுள்ள ஒருவரை / ஒன்றை ஏவுதற்பொருளில் வரும் வினை ஏவல் வினை எனப்படும்.

  உ+ம்: தம்பி விரைவாக ஓடு .

 

10.ஏவல் வினை அடிகளாக வரக்கூடிய சொற்கள் சில தருக. 

    வா, போ, தா, படி, உண், தின், குளி, குடி, படு, அடி போன்றனவாகும்.

 

மேலும் பாடங்கள்