பெயர்ச் சொற்கள்

தரம் 8 பாடம் 3:2.1

 

பெயர்ச் சொற்கள் 

கற்பாறை மலையிலிருந்து விழுந்தது.
இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள கற்பாறை, மலை ஆகிய சொற்களைக் கவனிப்போம்.

கற்பாறை, மலை ஆகிய சொற்கள் ஏதோ ஒரு பொருளை உணர்த்தி வரும் சொற்கள் ஆகும். 

நாம் வாழும் உலகத்தில் உயிருள்ளவை, உயிரற்றவை, கண்ணுக்குப் புலனாகின்றவை, கண்ணுக்குப் புலனாகாதவை என எண்ணற்ற பொருள்கள் உள்ளன.

அப்பொருள்களை உணர்த்த வல்ல சொற்களைப் பெயர்ச்சொற்கள் என்பர்.

பெயர்ச்சொற்கள் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என ஆறு வகைப்படும்.