ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

தரம் 8 பாடம் 3:3.1

 

ஒலி வேறுபாட்டுச் சொற்கள் 

தமிழ் மொழியிலே லகர, ளகர, ழகர எழுத்துக்களும் ரகர, றகர எழுத்துக்களும் னகர, ணகர எழுத்துக்களும் ஒலிப்பிலும் பொருளிலும் வேறுபாடுடையன. அவற்றைத் திருத்தமாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் எழுதும் போதும் பிழைபட எழுதுவார்கள். ஒலி வேறுபாடுகளை உணர்ந்து உச்சரிப்பதும் எழுதுவதும் அவசியமாகிறது. 

 

லகர, ளகர, ழகர சொற்கள்

அலை –

அலையில்லாத கடல்.

அழை –

ஆசிரியர் மாணவனை அழைத்தார்.

அளை –

சிறுவர்கள் சேற்றினை அளைந்தார்கள்.

உலவு –

நான் வீதியில் உலாவினேன்.

உழவு –

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்.

உளவு –

அரசன் பகை நாட்டினை உளவு பார்த்தான்.

 

லகர, ளகர, ழகர சொற்களும் பொருளும்

உலை –

கம்மாலன் உலை, உலைதல்

உளை –

குதிரை,சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர், வருந்துதல்

உழை –

இடம், மான், உழைத்தல்

சூல் –

கரு, தோண்டுதல்

சூள் –

ஆணை, சபதம், தீவர்த்தி

சூழ் –

சூழ்ந்துகொள், சுற்று, சூழ்ச்சி